×

ஹர்மன்பிரீத் 3000 மற்றும் 150 இரட்டை சாதனை

சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன் சாதனை மைல் கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு கிடைத்துள்ளது. உலக அளவில் நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் (3820), ஆஸ்திரேலியாவின் மெக் லான்னிங் (3346), வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஸ்டெபானி டெய்லர் (3166) ஆகியோரை தொடர்ந்து ஹர்மன்பிரீத் 4வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் நபர் என்ற உலக சாதனையும் ஹர்மன்பிரீத் வசமாகி உள்ளது. 2009ல் தனது முதல் சர்வதேச டி20ல் அறிமுகமான அவர் 14 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளார்.


Tags : Harmanpreet 3000 and 150 double feat
× RELATED பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ